நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கொரியாவுக்குச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேஎல்ஐஏவிற்கு திரும்பியது: மாஸ் விளக்கம் 

கோலாலம்பூர்:

தென் கொரியாவுக்குச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கேஎல்ஐஏவிற்கு திரும்பியது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியது.

தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சென்ற எம்எச்66 விமானம் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் கேஎல்ஐஏவிற்கு திரும்பியது.

இன்சியோனுக்கான விமானம் எம்எச்6டி ஆக மாற்றப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு அந்த விமானம் புறப்படும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின்  டெர்மினல் 1 இல் பாதுகாப்பாக தரையிறங்கியது.

அனைத்து பயணிகளும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset