நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் கைதான இலங்கை பெண் முகவரால் ஏமாற்றப்பட்டதாக கூறி கண்ணீர்

ஷாஆலம்:

குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் கைதான இலங்கை பெண், முகவரால் ஏமாற்றப்பட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

ஷாஆலம் ஜாலான் கெபூனில் இணையத்தின் வாயிலாக வாங்கும் பொருட்களின் கிடங்கில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மதியம் 12 மணியளவில் நடத்தப்பட்ட இச் சோதனையில் கிட்டத்தட்ட 37 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவர்ககளை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைதானவர்களில் 20 வயதுடைய இலங்கைப் பெண் ஷஹானியும் அடங்குவார்.

எனது கடப்பிதழையும் விசாவையும் புதுப்பிக்க  முகவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை.

கடந்த 2022ஆம் ஆண்டும் இக் கிடங்கில் வேலை செய்வதற்காக முகவர் ஒருவரால் நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்.

3,000 ரிங்கிட் செலுத்தி சம்பந்தப்பட்ட முகவர் மூலம் பணி அனுமதிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பதாகவும், இருப்பினும் தாம் முகவரால் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset