நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு  ஆய்வு செய்யப்படும்: தக்கியுடின் 

கோலாலம்பூர்: 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான  புரிந்துணர்வு ஒப்பந்ததின் வரைவு குறித்து தேசியக் கூட்டணி பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

இந்த வரைவில் பல தெளிவின்மைகள் உள்ளதாகவும் இது குறித்துத் துணைப் பிரதமர் 
டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப்பின் அலுவலகத்துடன் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான  புரிந்துணர்வு ஒப்பந்ததின் வரைவைத் தற்போது ஆய்வு செய்வதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

இந்த வரைவில் விவரங்களில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இனம்,மதம் மற்றும் ஆட்சியாளர் தொடர்பான பிரச்சனைகளையும் இந்த வரைவு தொடுகிறது என்று தக்கியுதீன் கூறினார்.

அரசாங்கத்திற்கான தேசியக் கூட்டணியின் ஆதரவு இந்த ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக இந்த வரைவில் இருப்பதாக தக்கியுதீன் சுட்டிக் காட்டினார். 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் சரியான அளவு குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதனால் இந்த வரைவை ஏற்கலாமா வேண்டாமா என்று தங்கள் தரப்பு ஆய்வு செய்து வருவதையும் தக்கியுடின் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset