நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து பயிற்சியாளர் கிம் பான் கோனின் செயல் முதிர்ச்சியற்றது: எஃப்ஏஎம் தலைவர் ஹமிடின் சாடல்

பெட்டாலிங் ஜெயா:

தேசியக் கால்பந்து அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கிம் பான் கோன் கடந்த மாதம் ராஜினாமா செய்தது அவரின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையைக் காட்டுவதாக மலேசியக் கால்பந்து சங்கத்தின், எஃப்ஏஎம் தலைவர் டத்தோ ஹமிடின் முஹம்மத் அமின் சாடியுள்ளார். 

தனக்குத் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாகத் தாம் பயிற்சியாளர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக பான் கோன் தம்மிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 

ஆனால் கிம் பான் கோன் தேசியக் கால்பந்து பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்யும் முன் கொரியாவின் Ulsan HD கால்பந்து கிளப்பில் இணைவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வந்தார். அந்தக் கால்பந்து கிளப்பில் அவர் இணைந்துள்ளார். 

அவரின் செயல் ஏமாற்றமடைவதாக ஹமிடின் கூறினார். 

கிம் பான் கோனின் சுயநலமான செயல் மலேசியக் கால்பந்து சங்கத்தைப் பாதித்துள்ளது.

மலேசியக் கால்பந்து சங்கம் கிம் பான் கோனை நல்முறையில் அரவணைத்ததாகவும்  ஹமிடின் தெரிவித்தார்,

தேசிய அணிக்கு அவர் செய்த சேவையின் காரணமாக பான் கோனுக்கு எதிராக மலேசியக் கால்பந்து சங்கம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset