நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி

முனிச்:

ஜெர்மனி பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் வெற்றி பெற்றனர்.

இடுனா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் ஹெய்டன்ஹைம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் ஹெய்டன்ஹைம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கரீம் அடெய்மி இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை டோன்யல் மேலன், எம்ரி கான் ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால் பெதிஸ் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லெகானஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset