நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2027ஆம் ஆண்டு கோலாலம்பூர் சீ விளையாட்டு போட்டி; மூன்று மாநிலங்கள் ஏற்று நடத்த இணக்கம்

கோலாலம்பூர்: 

2027ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்தும் வேளையில் உபசரணை நகரமாக கோலாலம்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சபா, சரவாக், பினாங்கு ஆகிய மாநிலங்களும் கோலாலம்பூருடன் இணைந்து சீ விளையாட்டு போட்டியை ஏற்று நடத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். 

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களும் தங்களுக்கான நிதிகளை செலவிடவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீ விளையாட்டு போட்டியை மலேசியா நடத்துவதற்கு கிட்டத்தட்ட 700 மில்லியன் ரிங்கிட் ஒட்டுமொத்தமாக தேவைப்படுகிறது. 

கடந்த முறை என்றில்லாமல் இம்முறை மாநில அரசாங்கங்களும் இதில் இணைந்துள்ளன. இதனால் மத்திய அரசாங்கம் நிதிச்சுமையை எதிர்நோக்கமாட்டார்கள் என்று ஹன்னா இயோ தெளிவுப்படுத்தினார். 

சரவாக் மாநில 700 மில்லியன் ரிங்கிட்டில் சுமார் 50 விழுக்காட்டு விளையாட்டு போட்டியின் நிதியை ஏற்றுகொள்கிறது, சபா 100 மில்லியனும் பினாங்கு 15 மில்லியனும் தங்களின் நிதியை ஏற்றுகொள்கின்றனர். 

2027ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்தும் என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு அறிவித்தது. சீ விளையாட்டு கூட்டமைப்பு மலேசியாவின் விண்ணப்பத்தை ஏற்று கொண்ட நிலையில் மலேசியா இந்த ஆசியான் விளையாட்டு திருவிழாவை ஏற்பாடு செய்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset