நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2027-ஆம் ஆண்டுக்கான சீ விளையாட்டுப் போட்டி தேசிய விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் அளிக்கும்

கோலாலம்பூர்: 

2027-ஆம் ஆண்டுக்கான சீ விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதற்கான அமைச்சரவை முடிவை மலேசிய ஒலிம்பிக் மன்றம் வரவேற்றுள்ளது. 

இந்நடவடிக்கை தேசிய விளையாட்டுத் துறையை புத்துயிர் பெறுவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகும் என்று அம்மன்றம் கூறியுள்ளது.

ஏழாவது முறையாக மலேசியா  சீ விளையாட்டு போட்டியை ஏற்று நடத்தவுள்ளது.

இது அரசியல், பொருளாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் கணிசமான பலன்களைத் தருவதாகவும் நாடு தழுவிய அளவில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் என்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

மலேசியா 1965, 1971, 1977, 1989, 2001 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது.

2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதலில்  145 தங்கம், 92 வெள்ளி மற்றும் 86 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்தது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset