
செய்திகள் வணிகம்
பங்சாரில் பிரம்மாண்டமாக திறப்பு விழா கண்டது MOSIN SIGNATURE உணவகம்
கோலாலம்பூர்:
பங்சாரில் பிரம்மாண்டமான முறையில் MOSIN SIGNATURE உணவகம் இன்று திறப்பு விழா கண்டது.
தலைநகரிலுள்ள பங்சார் உத்தாமா 1 இல் இந்த உணவகம் திறப்பு விழா கண்ட வேளையில் இந்த விழாவில் நூற்றுகணக்காணோர் கலந்து கொண்டு பிரியாணி உணவை உண்டு ருசித்தனர்.
இந்த நிகழ்வில் MOSIN SIGNATURE கடையின் உரிமையாளர் டத்தோ முஹம்மத் மோசின் பின் அப்துல் ரசாக் வருகையாளர்களை வரவேற்று உணவுகளை அனைவருக்கும் பரிமாறினார்.
தாமான் துன் மற்றும் ஜாலான் பகாங்கில் இரு MOSIN SIGNATURE உணவகம் இருக்கும் நிலையில் மூன்றாவது கிளையாக பங்சாரில் MOSIN SIGNATURE உணவகத்தைத் திறந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார்.
நண்பர்களின் அறிவுறுத்தல்கள், கருத்துகளின் அடிப்படையில் இந்த மூன்றாவது கிளை இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள பங்சார் எல்.ஆர்.டியின் பின்புறத்தின் பங்சார் உத்தாமா பகுதியில் MOSIN SIGNATURE உணவகம் அமைந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am
குவைத் மண்ணில் விளைந்த வாழைப்பழங்கள்: முதல் முறையாக வணிக முறையில் விற்பனைக்கு வருகின்றன
August 8, 2025, 12:29 pm
மலேசியாவில் புகழ் பெற்ற டோம்யாம் உணவகம் ராமநாதபுரத்தில் திறப்பு
August 7, 2025, 9:29 pm
சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவும்
August 5, 2025, 10:39 am
மலேசிய ரிங்கிட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்தது
August 4, 2025, 6:30 pm
பிரிக்பீல்ட்ஸில் புதியதாக திறக்கப்பட்டுள்ள டீ கடை கஃபே சமூக கடப்பாடுடன் செயல்படுகிறது
August 1, 2025, 6:09 pm