நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

'இ- இன்வாய்ஸ்' திட்டம் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு, வருமானவரி வாரியத்தின் ஆதரவோடு முதல் கட்ட அறிமுகம்

ஈப்போ: 

பேராக் வர்த்தக சபை " இ- இன்வாய்ஸ்" திட்டம் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு, வருமானவரி வாரியத்தின் ஆதரவோடு முதல் கட்ட அறிமுகம் செய்துள்ளதாக பேராக் இந்திய வர்த்தக சபை தலைவர் பா. ரவிசங்கர் கூறினார்.

வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வரும் இந்திய தொழில்முனைவர்கள் இத்தகைய டிஜிட்டல் முறையில் தங்கள் வணிக கணிக்கறிக்கைகளை சீரமைக்க ஏதுவாக இத்திட்டம் அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக வங்கிகளில் கடன் உதவி கிடைக்கப்பெற பேருதவியாக அமையும். இந்த " இ- இன்வாய்ஸ்" திட்டம் அவ்வப்பொழுது சீரமைக்கப்பட்டு் முழுமையாக இருப்பதால் வங்கிகளில் கடனுதவி பெற அதிக வாய்ப்புகள் உண்டு என்று அவர் கருத்துரைத்தார்.

May be an image of 5 people and dais

மலேசிய வருமானவரி வாரியம் இந்த "இ- இன்வாய்ஸ் புதிய திட்டத்தை தொழில்முனைவோருக்கு இம்மாதம் முதல் தேதி முதல் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு மேல் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்கு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக பேராக் வருமான வாரியத்தின் அதிகாரி மு.ராஜேந்திரன் கூறினார். 

இத்திட்டம் வணிகத்துறையில் கணக்கறிக்கைகள் சீரமைக்க ஏதுவாக அமைகிறது. இந்த டிஜிட்டல் திட்டம் குறித்து முழு தகவலையும் வருமானவரி வாரியத்தின் அகப்பக்கத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. இவைகளை பின்பற்றி செயல்பட்டால் வருமானவரிகளை அதிகமாக செலுத்த தேவையில்லை.

இதனால் தொழில்முனைவருக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்த  இன்றைய வருகையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நாராயணன் அண்ட் கோ பட்டய கணக்காய்வு  நிறுவனத்துடன் பேராக் இந்திய வர்த்தக சபை ஒன்றிணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக கணக்காயவாளர் பச்சையப்பன் கூறினார்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset