நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் மக்கள்தொகை 4% குறைந்தது: கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட விளைவு

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் மக்கள்தொகை சுமார் நான்கு விழுக்காடு அளவு குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட நாடு என்றாலும், இதற்கு முன்பு இருமுறை மட்டுமே அங்கு மக்கள் தொகை குறைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அத் தீவு நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 5.45 மில்லியன் இது ஜூன் மாத நிலவரமாகும்.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகை 5.45 மில்லியனாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டுவிட இது சுமார் 4.1 விழுக்காடு குறைவாகும். கடந்த 2020ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகை 5.69 மில்லியனாக இருந்தது.

"மக்கள்தொகை குறைந்திருப்பது இது மூன்றாவது முறை. இதற்குமுன் 2020ஆம் ஆண்டிலும் (0.3%) 1986ஆம் ஆண்டிலும் (0.1%) மக்கள்தொகை சரிவு கண்டிருந்தது.

"சிங்கப்பூரர்கள் மக்கள்தொகை 0.7% குறைந்து 3.5 மில்லியனாக ஆனது. அதேபோல, நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையும் 6.2% சரிந்து, 0.49 மில்லியனாக ஆனது.
அனைத்து வகை அனுமதி அட்டைகளில் இருப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது," என்று சிங்கப்பூர் தமிழ் முரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர்வாசிகள் அல்லாதோரில், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் - 20%, சார்ந்திருப்போர் - 18%, இல்லப் பணிப்பெண்கள் - 16% , எம்பிளாய்மன்ட் பாஸ் - 11%, எஸ்-பாஸ் - 11% என்ற விகிதத்தில் உள்ளதாகவும் அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியும் அது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும்தான் மக்கள் தொகை குறைந்ததற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset