நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

வளமான பிராந்தியத்தை உறுதிப்படுத்த ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

அமைதியான, நிலையான, வளமான பிராந்தியத்தை உறுதி செய்ய ஆசியான் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 57-ஆவது ஆசியான் தின வாழ்த்து தெரிவித்தார். 

அமைதியான, நிலையான, செழிப்பான பிராந்தியத்தை உறுதி செய்வதற்காக நாம் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் ஆசியான் தினம் கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார். 

பல்வேறு துறைகளில் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மலேசியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். 

ஆசியான் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒன்றாக இணைந்து செயல்படவும் தொடரும் என நம்புவதாக அன்வார் கூறினார்.

ஆசியான் தினம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அதன் 10 உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வளர்க்கும் பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பான பிளாக் நிறுவப்பட்டதன் வருடாந்திர நினைவுநாள் ஆகும்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset