நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டுவிட்டது 

கோலாலம்பூர்: 

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து மக்கோத்தா சட்டமன்றம் காலியானதாக மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்டு விட்டதாக ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முஹம்மத் புவாட் ஷர்காஷி கூறினார் 

இன்று காலையில் இந்த விவகாரம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டு விட்டது. 

மக்கோத்தா சட்டமன்றம் தொடர்பாக மலேசியத் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று டத்தோ டாக்டர் புவாட் ஸர்காஷி சொன்னார். 

கடந்த வெள்ளிக்கிழமை, 64 வயதான டத்தோ ஷரிஃபா அஸிஸா உடல்நலக்குறைவால் காலமானார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் தேமு சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset