நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒற்றுமையுடன் ஒன்று திரளுங்கள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு

கோலாலம்பூர்: 

இன்று புக்கிட் ஜாலில் உள்ள ஆசியாட்டா அரங்கில் நடைபெறவுள்ள ‘‘Himpunan Pembebasan Palestin’ பேரணியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒற்றுமையுடன் திரளுமாறு மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். 

இறைவன் நாடினால், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாலஸ்தீன மக்களுக்கு மலேசியர்கள் ஆதரவை ஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம். நதி முதல் கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்க வேண்டும்  நேற்று இரவு முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டம், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை மலேசியா கண்டிக்கும். இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் இரக்கமற்ற கொடுமையை எதிர்க்கிறது என்ற செய்தியை உலகிற்கு தெரிவிப்பதை இந்த பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மேலும் பல தலைவர்களுடன் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவை அறிவிக்கும் நிகழ்வில் பிரதமர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil, பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் பேரணியில் குறைந்தது சுமார் 20,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset