நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

32 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி குற்றங்களை ஒப்புக்கொள்ளவிருக்கும் தாய்லாந்து மாது

சிங்கப்பூர்:

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கைதான தாய்லாந்து மாது கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்குப் பின்,

32 மில்லியன் சிங்கப்பூர் டாலர் பெறுமானமுள்ள ஆடம்பரப் பொருள்கள் தொடர்பான மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

பன்சுக் சிரிவிப்பா என்ற அம்மாதின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அவர் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

பன்சுக் மீது 180க்கும் மேலான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, 198,000 அமெரிக்க டாலர் அதிக பெறுமானமுள் மற்றவரின் ஆடம்பர கைக்கடிகாரங்களைத் தன்னுடைமையாக்கியது ஆகியவை தொடர்பானவை.

இதில் அவருடைய கணவரான பி ஜியாபெங்கிற்கு எதிரான வழக்கு இன்னமும் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியாபெங் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவர் எப்பொழுது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்பது தெரியவில்லை. 

இது குறித்து அவருடைய வழக்கறிஞர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset