நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டனில் பள்ளிவாசலை குறிவைத்து கலவரம்

லண்டன்:

பிரிட்டனில் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து தீவிர வலதுசாரி அமைப்பினர் மசூதியைக் குறிவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அந்த நாட்டின் நார்த்-வெஸ்ட் இங்க்லண்ட் மாகாணம், சவுத்போர்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தன. 11 சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற 2 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

முஸ்லிம்கள் மீது சந்தேகத்தின் வதந்தியை நம்பி மசூதியைக் குறிவைத்து தீவிர வலதுசாரி கும்பல் கல்வீச்சு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது. இதில் ஏராளமான காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்களுக்கும் அந்தக் கும்பல் தீவைத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset