
செய்திகள் விளையாட்டு
பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மூன்றாவது பதக்கம் கிடைத்தது
பாரிஸ்:
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.
2024-இல் பாரிஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
இதில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்வப்னில் குசேல் 451. 4 புள்ளிகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.
இந்தியாவுக்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am
ஜெர்மன் பண்டஸ்லீகா காற்பந்து போட்டி: 34ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற பாயன் மியூனிக்
May 5, 2025, 8:57 am