நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு மாதங்களில் 58,700 VEP விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன: போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் 

ஜொகூர் பாரு: 

இரு மாதங்களில் வாகன நுழைவு அனுமதி (VEP)-க்கு 58,700 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அரசாங்கத்திற்கு வந்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

இவ்வாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வாகன நுழைவுக்கான அனுமதி அமல்படுத்தப்படும் என்று மே 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 

மே 28-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மொத்தம் 58,791 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

கடந்த இரண்டு வருடங்களை விட கடந்த இரண்டு மாதங்களில் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

கிடைக்கப் பெற்ற மொத்த விண்ணப்பங்களில் 19,640 விண்ணப்பங்கள் பூர்த்தியடைந்துள்ளன. 

மொத்த விண்ணப்பங்களில், 40% அல்லது 24,104 விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதை அந்தோனி லோக் குறிப்பிட்டார்.   

ஒரு சில விண்ணப்பங்களில் கார் உரிமையாளரின் காப்பீட்டுச் சான்றிதழ், வாகன உரிமைச் சான்றிதழ் மற்றும் உரிமையாளரின் அடையாள அட்டை போன்ற தேவையான ஆவணங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஆவணங்கள் முழுமையாக இல்லையென்றால் விண்ணப்பத்தை செயல்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset