
செய்திகள் உலகம்
சூடான் ராணுவ தளபதி மீது டிரோன் தாக்குதல்: 5 பேர் உயிரிழந்தனர்
கார்டோம்:
சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் சூடானின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், சூடான் ராணுவ தளபதி அப்தல் பதா புர்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சூடானில் உள்ள கெபெயிட் நகரில் நடைபெற்ற ராணுவ பட்டமளிப்பு விழாவின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ராணுவ தளபதி அப்தல் பதா புர்ஹான் காயமின்றி உயிர் தப்பியதாகவும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 13, 2025, 12:50 pm
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இலங்கை முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am