செய்திகள் உலகம்
டயானாவின் நகையை தன் சகோதரனின் மனைவி மேஹன் மார்க்கல் அணியத் தடை விதித்த இளவரசர் வில்லியம்
லண்டன்:
ஹாரி - மேஹன் மார்க்கல் திருமணத்தின்போது, இளவரசி டயானாவின் நகைகளை அணிந்துகொள்ள, இளவரசர் வில்லியம் அனுமதிக்கவில்லை என்று, ராயல் குடும்பம் பற்றிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரோப் ஜாப்சன் என்பவர் எழுதிவரும் கேத்தெரைன், வேல்ஸ் இளவரசர் என்ற புத்தகத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் - தனது தாயின் நிச்சயதார்த்த மோதிரத்தைக் கொடுத்து கேட் மிடில்டன்னிடம் காதலை வெளிப்படுத்தியவர்.
மேகன் மார்க்கலை திருமணம் செய்வது என்று இளவரசர் ஹாரியின் முடிவு குறித்து ஆரம்பம் முதலே கவலைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புத்தகத்தில் இருப்பதாக வெளியான தகவலின்படி, இளவரசர் வில்லியம்ஸ் தனது 39 வயதான இளைய சகோதரரிடம், மேஹனுடனான உறவை சில காலம் அப்படியே வைத்திருக்கவும், அதன் மூலம், அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களை, குடும்பத்துக்குள் நுழைவதற்கு முன்பு பழகுவதற்கு வசதியாக இருக்கும் என்று கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு, அரச குடும்பத்துக்குள் மேஹன் மார்க்கல் இணைவதற்கு முன்பு, சகோதரர்கள் இருவருக்குள் எப்படி பூசல் உருவானது என்பதையும் இந்த புத்தகம் விவரிப்பதாகக் கூறுகிறது.
இளவரசி டயானாவின் நகைகள் சிலவற்றை, இளவரசர் வில்லியமின் மனைவி அணிந்திருந்தாலும் கூட, தனது சகோதரரின் மனைவியாகப் போகும் நபர் அணிய அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது அரச குடும்ப பதவியைப் பொருத்து இது கொண்டுவரப்பட வேண்டும் என்று ராணி எலிசபெத்திடம் வில்லியம் உறுதிமொழி வாங்கிக்கொண்டதாகவும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
