
செய்திகள் கலைகள்
புயலில் உயிர்ப் பிழைத்த இந்தியச் சிறுமியைப் படம்பிடித்தவருக்கு விருது
கொல்கொத்தா:
கடும் புயலில் சிக்கி உயிர்ப் பிழைத்த இளம் பெண்ணைப் படம்பிடித்த சுப்பிராதிம் பட்டாச்சார்ஜி (Supratim Bhattacharjee) என்பவர் இவ்வாண்டின் Mangrove Photographer of the Year நிழற்பட விருது விழாவில் ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் அந்தச் சிறுமியை இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் (West Bengal) சுந்தரவனக் காட்டில் படம் பிடித்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
படத்தில் அந்தச் சிறுமி புயலில் சேதமைடைந்த தமது வீட்டிற்கு முன் நிற்பதைக் காணலாம்.
"இக்கட்டான நிலைமையில் சிறுமியின் முகத்தில் வலிமையும் அமைதியும் தெரிந்தன" என்று பட்டாச்சார்ஜி கூறினார்.
Mangrove நிழற்பட விருது விழா இவ்வாண்டு 10ஆவது முறையாய் நடத்தப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வனவிலங்குகள், கடலோரப் பகுதிகள், சதுப்புநிலக் காடு, கடல் பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பைக் காட்டும் நோக்கத்தில் விருது விழா நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடு உலகின் ஆகப் பெரிய சதுப்புநிலக் காடு.
ஆதாரம்: பிபிசி
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm