நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக்: ஜப்பான் இணையினரை வீழ்த்திய தேசிய பூப்பந்து இரட்டையர் பெர்லி தான் -எம். தீனா 

பாரிஸ்: 

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நாட்டின் தேசிய மகளிர் இணையினர் பெர்லி தான்- எம்.தீனா ஜோடியினர் ஜப்பான் நாட்டின் பூப்பந்து இணையினரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினைப் பிரகாசப்படுத்தி கொண்டனர். 

ஏ குழு நிலையிலான பூப்பந்து ஆட்டங்கள் PORTE DE LA CHAPELLE ARENA வில் நடைபெற்று வரும் நிலையில்  மலேசியா இரட்டையர் மகளிர் பிரிவு சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 

77 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பெர்லி தான் - எம்.தீனா ஜோடியினர் 18-21,21-15,21-16 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்றனர். 

அடுத்ததாக, பெர்லி தான் - எம். தீனா ஜோடியினர் இந்தோனேசியா நாட்டின் இணையினரைச் சந்தித்து விளையாடவுள்ளது. இவ்வாட்டத்தில் மலேசியா வெற்றிப்பெற்றால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset