நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக பில்லியனர் அந்தஸ்தை அடைந்துள்ளார்

லண்டன்:

போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக பில்லியனர் அந்தஸ்தை அடைந்துள்ளார்.

இது உலகின் மிகவும் பிரபலமான வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஒரு வீரரின் வாழ்க்கையில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

சவூதி அரேபிய கிளப்பான அல் நசருடனான ஒப்பந்தத்தை அவர் நீட்டித்துள்ளார்.

இதன் பிறகு சம்பளம், போனஸ்களை விட அதிகமாக ரொனால்டோவின் மெகா ஒப்பந்தம் அவரை விளையாட்டு வணிக உலகின் ஜாம்பவான்களுக்கு இணையாக  வைத்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ரொனால்டோவின் மொத்த தொழில் வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.

இப்போது அவரது நிகர மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று celebritynetworth.com தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரொனால்டோ தனது முக்கிய போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியை முந்தினார்.

அவர் மேஜர் லீக் கால்பந்து கிளப்பான இந்தர் மியாமியில் தனது சொந்த மெகா ஒப்பந்தத்தில் இணைந்த பிறகு, அவரது நிகர மதிப்பு 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகின் பணக்கார தொழில்முறை கால்பந்து வீரராக பரவலாகக் கருதப்படும் ஃபைக் போல்கியாவுடன் ஒப்பிட ரொனால்டோவால் இன்னும் முடியவில்லை.

ஃபைக் புருனே சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியாவின் மருமகன் ஆவார்.

அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset