நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

10 ஓட்டப்பந்தய வீரர்களை தத்தெடுத்து உரிய உதவிகளை சிகாம்புட் தொகுதி பிபிபி வழங்கியது: டத்தோ வினோத்

கோலாலம்பூர்:

தேசிய அளவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பத்து ஓட்டப்பந்தய வீரர்களை சிகாம்புட் பிபிபி தொகுதி தத்தெடுத்தது.

சிகாம்புட் பிபிபி தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத்  இந்த பத்து ஓட்டப்பந்தய விளையாட்டாளர்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேசிய கொடி சின்னம் பொறிக்கப்பட்ட  டி - சட்டைகள், காலணிகளை வழங்கினார்.

பிபிபி கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பயிற்றுநர் அன்புமணி, பத்து விளையாட்டாளர் கலந்து கொண்டனர்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

விலாயா மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட பத்து ஓட்டப்பந்தய விளையாட்டாளர்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவிகளை வழங்கிய சிகாம்பூட் பிபிபி தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் சேவையை டத்தோ டாக்டர் லோகபாலா வெகுவாக பாராட்டினர்.

தேசிய அளவில் இந்த பத்து ஓட்டப்பந்தய விளையாட்டாளர்கள் பல சாதனைகளை படைக்க பிபிபி கட்சி மனதார வாழ்த்துகிறேன் என்று டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார்.

டத்தோ டாக்டர் வினோத் இதற்கு முன்னர் பல சமூக சேவைகளை புரிந்துள்ளார்.

இப்போது இளம் ஓட்டப் பந்தய விளையாட்டாளர் களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இவர்களுக்கு இந்த உதவிகளை வழங்க டத்தோ டாக்டர் வினோத் முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset