நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி; 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இசை விருந்தினை படைத்தார் 

கோலாலம்பூர்: 

இந்தியாவின் மாபெரும் இசை ஜாம்பவன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மலேசிய இசைநிகழ்ச்சி நேற்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் விமரிசையாக நடைபெற்றது 

AR RAHMAN LIVE IN MALAYSIA இசைநிகழ்ச்சியில் சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் வரை கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு மேலும் வலுசேர்க்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரின் துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் இரவு 10.25 மணியளவில் இசைநிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து முன்னணி பாடகர்களும் இசைக்குழுவினரும் சிறப்பான படைப்பினை வழங்கினர். 

ஜெய்ஹோ, முக்காலா முக்கபுலா, ஃபனா, வாட்டர் பேக்கட் ஆகிய பாடல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றன. 

AR RAHMAN LIVE IN MALAYSIA இசை நிகழ்ச்சியை STAR PLANET நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset