நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மகளிர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட்: இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

கொழும்பு:

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani, Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில் 141 ஓட்டங்களைப் பெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் Chamari Athapaththu அதிகூடிய ஓட்டங்களாக 63 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Sadia Iqbal 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset