நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் தோல்வி

பாரிஸ்:

ஐரோப்பா தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணியினர் தோல்வி கண்டனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் இத்தாலி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் பிரான்ஸ் அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியிடம் தோல்வி கண்டனர்.

சொந்த அரங்கில் களமிறங்கிய பிரான்ஸ் அணியின் இந்த தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் இஸ்ரைல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ருமேனியா, சைபரஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset