நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்று உலக சாதனையை முறியடித்தார் மலேசியாவின் பளுதூக்கும் வீரர் போனி

பெட்டாலிங் ஜெயா: 

தேசியப்( பவர் லிஃப்டிங்) பளுதூக்கும் வெற்றியாளரான Bonnie Bunyau Gustin பாரீஸ் பாராலிம்பிக்ஸில் நாட்டிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். 

சரவாக்கைச் சேர்ந்த 25 வயதான போனி  72 கிலோவுக்கு குறைவான ஆண்களுக்கான போட்டியில் மொத்தம் 232 கிலோ எடையைத் தூக்கி தனது சொந்த சாதனையை முறியடித்து தங்கப்பதக்கத்தைத் தன் வசமாக்கினார். 

வெள்ளிப் பதக்கத்தைச் சீன வீரர் ஹூ பெங் வென்ற நிலையில் மூன்றாவது பதக்கம் இத்தாலி வீரரான Donato Telesca-க்குச் சொந்தமானது.

கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் நடந்த உலக மாநாட்டில் போனி 231 கிலோ எடை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், பாரிஸ் பாராலிம்க்ஸ் போட்டியில் மலேசியா இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 38-ஆவது இடத்திலுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset