நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முன்னாள் லிவர்பூல் கேப்டன் 86 வயதில் காலமானார்

லண்டன்:

எப்ஏ கிண்ணத்தை வென்ற முதல் லிவர்பூல் கேப்டனான ரான் யீட்ஸ் தனது 86ஆவது வயதில் காலமானார் என்று அக் கிளப் அறிவித்தது.

ரான் யீட்ஸ் 1965இல் லிவர்பூல் கேப்டனாக எப்ஏ கிண்ணத்தை வென்றார்.

23 வயதில் லிவர்பூலுக்கு மாறிய பிறகு, ஆறு மாதங்களுக்குள் யீட்ஸ் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

கடந்த தசாப்தத்தில் லிவர்பூல் கேப்டனாக 417 ஆட்டங்களில் அவரது சாதனை ஸ்டீவன் ஜெரார்டால் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டது.

லிவர்பூலுக்காக 454 முறை விளையாடிய பிறகு, அவர் மூன்று ஆண்டுகளுக்கு டிரான்மேரின் நிர்வாகியாக ஆனார்.

அதைத் தொடர்ந்து 1986 இல் ஆன்ஃபீல்டுக்குத் திரும்பினார்.

இந்நிலையில் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset