நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி

லிஸ்பன்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் போர்த்துகல் அணியினர் வெற்றி பெற்றனர்.

லிஸ்பனில் நடைபெற்ற குழு நிலையிலான ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் குரோஷியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, டியாகோ டாலோட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் செர்பியா அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் போலந்து, சான் மரினோ, சுவீடன், டென்மார்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset