நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசியக் கொடியை பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், நூர் ஷாஸ்ரின் ஆகியோர் ஏந்திச் சென்றனர்

பாரிஸ்:

ஒலிம்பிக் தொடக்க விழாவில் நாட்டின் தேசியக் கொடியை பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், நூர் ஷாஸ்ரின் ஆகியோர் ஏந்தி சென்றனர்.

இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இதில் ஒலிம்பிக் அரங்கில் தங்கப் பதக்கத்திற்கான மலேசியாவின் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறைகூவலை  ஏற்றுக் கொள்வதில் தேசியக் குழு உற்சாகமாக இருந்தது.

இந்நிலையில் தொடக்க விழா அணிவகுப்பில் முக்குளிப்பு நீச்சல் வீரர் பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ், தடகள வீரர் நூர் ஷாஸ்ரின் முஹம்மத் லத்தீஃப் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

மேலும் ஆறு தடகள வீரர்கள், நான்கு அதிகாரிகளால் மலேசியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

முன்னணி உள்ளூர் ஆடை வடிவமைப்பாளரான ரிஸ்மான் ருசைனி வடிவமைத்த தங்க வடிவத்துடன் ஆலிவ் பச்சை நிறத்தில் 'தெ மலாயா' பாணி வடிவமைப்பு ஆடையுடன் அவர்கள் நாட்டை பிரதிநிதித்து அழகாய் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset