நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் (Benjamin Netanyahu) பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை நெட்டன்யாஹு கடுமையாகச் சாடினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண் எரிச்சல் வரவைக்கும் தெளிப்பான்களைப் பயன்படுத்தினர். ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெட்டன்யாஹுவின் உரைக்கு எதிராக இஸ்ரேலிலும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

டெல் அவிவில் (Tel Aviv) நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். உடனடியாகப் போர் நிறுத்த உடன்பாட்டைச் செய்து பிணையாளிகளை மீட்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

காஸா போரில் பிணையாளிகளை மீட்பதைவிட ஹமாஸை ஒழிப்பதில் நெட்டன்யாஹு கவனம் செலுத்துவதாகக் குறைகூறப்படுகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று பிணையாளிகளின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையே, காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 55 பேர் மாண்டனர்.

கான் யூனிஸில் (Khan Younis) உள்ள அகதி முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் குண்டுகளை வீசுகிறது.

சென்ற ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸா போர் தொடங்கியது. அப்போதிலிருந்து இதுவரை 39,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்களை இஸ்ரேல் இராணுவம் கொன்றுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு மன்றம் கூறியது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset