நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்:  1000 மரணச் சம்பவங்கள் பதிவு 

ருவாண்டா: 

ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் குரங்கம்மை நோயால் ஐம்பது புதிய மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 1100 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதை ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  உறுதிப்படுத்தியது. 

மேலும்,  18 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 42,438 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்  தலைவர்  ஜீன் கசேயா கூறினார். 

தற்போது ஜிம்பாப்வே, ஜாம்பியாவில் ஆகிய இரு நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 86.4 விழுக்காடு குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டன. 

- தர்மாவதி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset