நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட  4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது

கொழும்பு -
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை போலிஸ் அதிகாரிகள் இணையக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை குறிவைத்து  அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சிலாவ் கடற்கரை நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்  அதிகாரிகள் நேற்று  சோதனைகளை நடத்தினர்.

இதில் இணைய அடிப்படையிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 10 வெளிநாட்டவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் நான்கு மலேசிய ஆண்களும் அடங்குவர்.

மேலும் மூன்று எத்தியோப்பியா ஆண்கள், ஒரு பெண், ஒரு கென்யா பெண், ஒரு சீன ஆடவரும் கைதானவர்களின்அடங்குவர்.

இந்தச் சோதனையில் 20 கணினிகள், 282 கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக போலிசார் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset