நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம் 

பெய்ஜிங்: 

சீனாவிலுள்ள நீர்வாழ் கண்காட்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்தது நிஜ சுறா மீன் மாறாக அஃது இயந்திர ராட்சத சுறா என்று தெரிய வந்ததுடன் பொது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஷென்செனில் உள்ள Xiaomeisha Sea World எனப்படும்  நீர்வாழ் கண்காட்சி மையம் ஐந்தாண்டு சீரமைப்பு பணிக்குப் பிறகு, அக்டோபர் 1 -ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 

அங்கே முக்கிய அம்சமான சுறாவைக் காண விரும்பும் மக்கள் கூட்டம்  திரண்டிருந்தது.

அதன் ஆரம்ப வாரத் தொடக்கத்தில், 59,922 சதுர மீட்டர் கடல் உயிரியல் பூங்கா சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

பொது மக்கள் நுழைவு கட்டணமாக 170 வெள்ளியைச் செலுத்தியுள்ளனர். 

இருப்பினும், திமிங்கல சுறா ஒரு இயந்திர சாதனம் என்பதைக் கண்டறிந்தபோது அவர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

கண்ணாடி தொட்டியின் வழியாக எடுக்கப்பட்ட சில படங்கள் இயந்திர சுறா இணைக்கப்பட்ட உடல் பகுதியில் தெளிவான இடத்தைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

Xiaomeisha Sea World-இன் சமூக ஊடகத் தளத்தில் நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

ஒரு சில பார்வையாளர்கள் நுழைவு பணத்தைத் திரும்பக் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

- நந்தினி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset