நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் மிக சிறிய சலவை இயந்திரம்: இந்திய பொறியியலாளர் செபின் சாஜி சாதனை 

வாஷிங்டன்  :

இந்தியாவைச் சேர்ந்த பொறியியலாளர், செபின் சாஜி உலகின் மிகச் சிறிய சலவை இயந்திரத்தை உருவாக்கி உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

ஒன்று புள்ளி ஐந்து எட்டு நீளமும் , ஒன்று புள்ளி மூன்று இரண்டு அகலமும் ஒன்று புள்ளி ஐந்து இரண்டு உயரத்தையும் கொண்ட  உலகின் மிகச் சிறிய சலவை இயந்திரத்தைச் செபின் சாஜி உருவாக்கினார்.

Tamagotchi இணையப் பிராணி பொம்மையை விட செபின் சாஜி உருவாக்கிய இந்தச் சலவை இயந்திரம் உலகின் மிகச் சிறிய சலவை இயந்திரம் என்ற பட்டத்தை பெற்றது. 

இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள காணொலியில் சலவை இயந்திரத்தை உருவாக்கும் செயல்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை நுணுக்கமாக முறையில் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறார்.

அத்துடன் முழுமையாக அந்தச் சிறிய சலவை இயந்திரம் செயல்பட தொடங்குகிறது. 

பின்னர், அந்த இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி பவுடரை போட்டு சிறிய துணி ஒன்றையும் போடுகிறார். சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது.

- தர்மாவதி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset