நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகே புதிய அரசாங்கம்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்

பாரிஸ்:

பிரெஞ்சு அதிபர் அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகே புதிய அரசாங்கம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் நடந்து முடிந்த தேர்தலில் இடசாரிக் கூட்டணி ஆகப் பெரிய குழுவாக உருவெடுத்துள்ளது. அதிகம் தெரியப்படாத அரசாங்க அதிகாரி லூஸி கேஸ்டேவை (Lucie Castets) அந்தக் குழு பிரதமர் பொறுப்புக்கு முன்மொழிந்துள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதிக்குள் புதிய பிரதமரை நியமிப்பது குழப்பத்தை உண்டாக்கலாம் என்று திரு மக்ரோன் கூறினார்.

சட்டபூர்வமான தேர்தல் முடிவை திரு மக்ரோன் ரத்துச் செய்ய முயல்வதாக இடசாரி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டினர்.

நாளை மறுநாள் (26 ஜூலை) தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 11 ஆம் தேதி நிறைவடையும்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரதமர் கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) பதவி விலகியதைத் திரு மக்ரோன் ஏற்றுக்கொண்டார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை இடைக்காலப் பிரதமராகத் தொடரும்படி அட்டாலிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம்: தி லோக்கல் பிரான்ஸ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset