நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போப் பிரான்சிஸுக்கு பிரத்தியேக நாற்காலிகள் செய்த தச்சர் கோவிந்தராஜ் முத்தையா

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் வரவிருக்கும் போப் பிரான்சிஸுக்கென்று மரத்தலான இரண்டு நாற்காலிகள் செய்யப்படுகின்றன.

44 வயது தச்சர் கோவிந்தராஜ் முத்தையா அவற்றைச் செய்கிறார்.

மரக் கட்டைகளை வெட்டுகிறார்; செதுக்குகிறார். 

கட்டைகள் பள்ளிவாசல்களிலிருந்தும் ஆலயங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை. 

அண்மையில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட பள்ளிவாசல்கள், ஆலயங்கள் ஆகியவற்றில் மரக் கட்டைகள் மிச்சம் உள்ளனவா என்று கேட்டதாக கோவிந்தராஜ் சொன்னார்.

அவை கட்டைகளை வழங்கியதாக அவர் கூறினார்.

"இது சமயத்துக்கு அப்பாற்பட்டது," என்றார் கோவிந்தராஜ்.

போப் பிரான்சிஸ் அடுத்த புதன்கிழமை (11 செப்டம்பர்) சிங்கப்பூர் வருகிறார்.

அப்போது அவர் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கோவிந்தராஜின் நாற்காலிகள் பயன்படுத்தப்படும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset