நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கைப்பேசி பயன்பாட்டால் மூளை புற்றுநோய் ஏற்படாது: புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் தகவல்

மெல்பர்ன்: 

கைப்பேசியைப் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகள் மூளையைத் தாக்கி மூளை புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக வெளிவந்த தகவலைப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்,  ஐஏஆர்சி மறுத்துள்ளது. 

மொத்தம் 5000 ஆய்விலிருந்து தரமான 63 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. 

அவற்றின் முடிவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தற்போது என்விரான்மென்ட் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், கைப்பேசி பயன்பாட்டிற்கும், மூளை புற்றுநோய் மற்றும் வேறு எந்தத் தலை, கழுத்துப் புற்றுநோய்க்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கைப்பேசியைப் பயன்படுத்தினாலும் எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், அதனால் புற்றுநோயுடன் எந்தச் சம்மந்தமும் இல்லை. 

கைப்பேசி, வயர்லெஸ் உபகரணங்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகளால் எந்தவொரு சுகாதார பாதிப்புக்கும் ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

ஆனாலும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. 

இதில், வெவ்வேறு அதிர்வெண்களில் வெவ்வேறு வழிகளில் ரேடியோ அலைகளின் பயன்பாடு இருக்கிறது. 

எனவே, ரேடியோ அலை வெளிப்பாடு பாதுகாப்பாக இருப்பதை தொடர்ந்து உறுதி செய்வது அவசியம் என ஐஏஆர்சி கூறி உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset