நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வடகொரியாவில் வெள்ளத்தால் 4 ஆயிரம் பேர் பலி: அதிகாரிகளுக்கு மரண தண்டனை 

சியோல்:

வடகொரியாவில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்கத் தவறிய 30 அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடகொரியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 ஆயிரம் பேர் இறந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த வெள்ளத்தில் வட கொரியாவின் சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாநிலத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

இதனையடுத்து கிம் ஜான் உன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். 

கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டும், சாலைகள், குடியிருப்பு இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றைக் கண்டும் வேதனையுற்றார்.

இதற்கிடையே வடகொரியா சாங்காங் மாநிலத்தில்  பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 4 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த கோர நிகழ்விற்கு எச்சரிக்கை விடப்பட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காததுதான் காரணம் என்று எண்ணிய வடகொரியா அரசு, 20 முதல் 30 அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும், மரண தண்டனையும் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 

ஷகாங் மாநிலத்தில் கட்சி செயலாளர் காங் போங்ஹூன் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset