நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனப் பண்ணைகளில் கிருமிப் பரவல் 

பெய்ஜிங்:

சீனாவில் உரோமப் பண்ணைகளில் உள்ள விலங்குகளிடையே பல்வேறு கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில புதியவை என்றும் அவை மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் உண்டு என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

உலகெங்கும் உள்ள உரோமப் பண்ணைகள் மூடப்பட வேண்டும் என்று நோய்த்தொற்று நிபுணர் எட்வர்ட் ஹோல்ம்ஸ் (Edward Holmes) சொன்னார்.

அவர் உரோமப் பண்ணைகள் குறித்த புதிய ஆய்வை வெளியிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் 2024 வரை நோய்வாய்ப்பட்டு மாண்ட சில விலங்குகள் ஆராயப்பட்டன.

அவற்றில் 125 வகைக் கிருமிகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 36 புதியவை.

39 கிருமிகள் மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் அதிகம் கொண்டவை.

உரோமத்திற்காக வளர்க்கப்படும் விலங்குகள் கூடுதலாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset