நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹசீனா வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும்: முஹம்மது யூனுஸ் எச்சரிக்கை

டாக்கா: 

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேச அரசியல் சூழல் குறித்து கருத்துகளைக் கூறாமல் வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும் என்று  அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ் தெரிவித்தார்.

அவரது கருத்துகளால் இரு நாட்டு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் அவர் எச்சரித்தார்.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது பயங்கரவாதச் செயல்கள், கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹசீனா வெளியிட்ட அறிக்கையை அமெரிக்காவில் உள்ள அவரது மகன் சஜீப் வாஜீத் ஜாய் சமூக வலைதளத்தில்  பகிர்ந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த யூனுஸ், இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது. ஆனாலும் ஹசீனா இல்லையென்றால் ஆப்கானிஸ்தான்போல் வங்கதேசம் மாறிவிடும் என்பதைப்போல் அவரது கட்சியினர் கொண்டு செல்கின்றனர்.

ஷேக் ஹசீனா, வங்கதேச அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிப்பதை இங்கு யாரும் விரும்பவில்லை. அவர் வாய்மூடி அமைதியாக இருந்தாலே அனைவரும் அவரை மறந்துவிடுவார்கள்.

ஹசீனாவின் பேச்சால் இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசம் அழைத்து வந்து, அவர் மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும்.

வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி அதை மிகைப்படுத்துகின்றனர் என்றார் முஹம்மது யூனுஸ்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset