நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சிங்கப்பூர் ஆதரவு

சிங்கப்பூர்: 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதியேற்றுள்ளன.

சிங்கப்பூரில் 2 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வாங்கை சந்தித்து, பின்னர் இரு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்ட  கூட்டறிக்கையில், உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் நீடிக்கிறது.

அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து போராட இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.

இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, தடையற்ற வர்த்தக சந்தையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset