நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் கடப்பிதழ் உலகின் மிகச் செல்வாக்குமிக்கது

சிங்கப்பூர்:

உலகிலேயே ஆக செல்வாக்குமிக்க கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூர் கடப்பிதழ் முதலிடம் வகிக்கிறது

227 பயண இடங்களில் 195 இடங்களுக்குச் சிங்கப்பூரர்கள் விசாயின்றி பயணிக்கலாம். 

பட்டியலின் முதலிடத்தில் சிங்கப்பூர் கடப்பிதழ் மட்டுமே உள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அந்நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த ஆக அண்மைய தகவல்களை ஹென்லி கடப்பிதழ் குறியீடு ஜூலை 23-ஆம் தேதியன்று வெளியிட்டது.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹென்லி கடப்பிதழ் குறியீடு வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூருடன் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன.

ஆஸ்திரியா, ஃபின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் மூன்றாவது இடத்தில் உள்ளன.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கடப்பிதழ்கள் தரவரிசையில் சரிந்துள்ளன. 2014-ஆம் ஆண்டில் அவ்விரு நாடுகளின் கடப்பிதழ்கள் முதலிடத்தில் இருந்தன.

பிரிட்டன், பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் நான்காவது இடத்தில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி 190 இடங்களுக்கு விசாயின்றி செல்லலாம்.

அமெரிக்காவின் கடப்பிதழ் எட்டாவது இடத்தில் உள்ளது. அதைப் பயன்படுத்தி 186 இடங்களுக்கு விசா இன்றி செல்லலாம்.

உலகிலேயே ஆகப் பலவீனமான கடப்பிதழாக ஆப்கானிஸ்தானின் கடப்பிதழ் உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடப்பிதழைப் பயன்படுத்தி 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset