நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வருமான வரி நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் 

புதுடெல்லி:

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அவரது உரையில், வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரியில் தனி நபர்களுக்கான வருவாயில் ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை.

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset