நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்: சீனா - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு  ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று சீனாவும் பாகிஸ்தானும் வலியுறுத்தியுள்ளன.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில்  சீனப் பிரதமர் லீ கியாங் பங்கேற்றுள்ளார்.

அப்போது சீனா கட்டிய குவடார் சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் லீ கியாங் திறந்து வைத்தார்.

பின்னர் பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன் பாகிஸ்தானில் சீனர்கள் கொல்லப்படுவது குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா - பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில், தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காக்க அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து  பாகிஸ்தான் விளக்கமளித்தது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு  ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset