நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

11,000 வைரக் கற்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உருவப்படம்

குஜராத்: 

இந்தியாவின் குஜராத்தின் சூரத் (Surat) நகரைச் சேர்ந்த நகைக் கடைக்காரர்  11,000 வைரக் கற்களைப் பயன்படுத்தி மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் ரத்தன் டாடாவின் உருவப்படத்தை அமைத்திருக்கிறார்.

Instant Bollywood எனும் Instagram பக்கத்தில் பகிரப்பட்ட அந்தப் பதிவு இதுவரை 660,000க்கும் அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்றிருக்கிறது.

பதிவைக் கண்ட இணையவாசிகள் நகைக் கடைக்காரரைப் பாராட்டிக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதில் சிலர் வைரத்தை வைரத்தால் கடைக்காரர் வடிவமைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

ரத்தன் டாடா பலருக்கு நம்பிக்கைச் சின்னமாக இருந்தவர் என்றும் இன்னும் சிலர் தெரிவித்துள்ளனர். 

இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா இம்மாதம் (9 அக்டோபர்) தமது 86ஆவது வயதில் காலமானார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset