நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய வெளியுறவு அமைச்சரை, உற்சாகமாக வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: 

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக நேற்று இஸ்லாமாபாத் சென்ற ஜெய்சங்கரை, விமான நிலையத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை இக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இலியாஸ் மெஹ்மூத் நிஜாமி வரவேற்றார். மேலும், ஒரு சிறுவன், ஒரு சிறுமி ஆகியோர் பாரம்பரிய உடை அணிந்து ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனையடுத்து, விருந்தினர்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது ஷெபாஸ் ஷெரீப், ஜெய்சங்கரை கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.

இரண்டாவது நாளான இன்று, மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த ஜெய்சங்கரை, ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். அப்போது, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset