நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகாருக்கு  சிறப்பு அந்தஸ்து கிடையாது: ஒன்றிய அரசு

புது டெல்லி:

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி தெரிவித்தார்.

இதனால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராம்பிரீத் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தெரிவிக்கையில்,பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு பரிசீலித்து 2012ஆம் ஆண்டு பரிசீலித்து, சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நிராகரித்துவிட்டது என்றார்.

அப்போது காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.

பின்தங்கிய மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய கோரிக்கையாக வைத்து வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset