நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகைக் கடைகளுக்கான தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றால் பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்: டத்தோ ஹாஜி அப்துல் ரசூல்

கிள்ளான்:

நகைக் கடைகளுக்கான தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றால்
பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் இதனை கூறினார்.

இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு பணிபுரிய 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியது.

நகைக்கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளுக்கு தலா 2,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் மலேசிய இந்தியர் பொற்கொல்லர் எனப்படும் நகைக்கடைகளுக்கு இதுவரை 17 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குறுதி அளித்தப்படி எங்களுக்கு 2,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.

நிலைமை இப்படியே போனால் நாங்கள் எப்படி வியாபாரத்தை நடத்துவது என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்றால் இன்னும் பத்து தினங்களில் பிரதமரை நாடி படையெடுப்போம் என்று அவர் ஆவேசமாக கூறினார்.

இந்திய பாரம்பரிய தொழில்துறைகள் பாதிக்கப்படாமல் இருக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கினார். 

ஆனால் இந்தியப் பாரம்பரிய தொழில்துறைகள் அந்நியத் தொழிலாளர்களை  வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு போதுமான வேலை ஆட்கள் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் 29ஆம் ஆண்டு கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset