நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா மாநில மந்திரி பெசார் முஹம்மத் சனூசிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை நாளை நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும் 

அலோர் ஸ்டார்: 

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமனம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் பரப்புரை நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாக பேசிய கெடா மாநில மந்திரி பெர்சார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி மாட் நோருக்கு எதிராக இரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நாளை ஷாஆலாம் உயர்நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின் முன்னிலையில் இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்குச் செவிமெடுக்கப்படும். இந்த தகவலை டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசியின் வழக்கறிஞர் அவாங் அர்மடாஜயா தெரிவித்தார். 

இந்நிலையில், தமக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி சட்டத்துறை அலுவலகத்தில் சனூசி மேற்கொண்ட விண்ணப்பம் சட்டத்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.

கடந்தாண்டு மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி இரு குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset